விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த மூன்று தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து நீர்வரத்து அதிகரித்து ஆறுகள் மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன. இதில் பெரிய மந்தை தெரு மற்றும் மாடசாமி கோவில் தெரு அய்யனார் கோவில் செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் அதிகப்படியான மழை நீர் தேங்கி உள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் குடியிருப்பு பகுதியில் வீடுகளிலும் மழைநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் மழை தாக்கம் குறையாமல் தொடர்ந்து பெய்து வருவதன் காரணமாக இராஜபாளையம் நகர் பகுதி முழுவதும் தண்ணீரில் தத்தளிக்கிறது .
இராஜபாளையத்தில் மூன்று தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
எழுதியவர்: mohan November 20, 2020, 9:47 am




You must be logged in to post a comment.