மின் வாரியத்தில் தேர்வு எழுதி தயார் நிலையில் உள்ள 10,000 கேங்மேன் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்,
மின் வாரியத்தில் காலியாக உள்ள 50 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், அவுட்சோர்சிங் என்ற பெயரில் மின் வாரியத்தை தனியார் மயமாக்கும் முடிவை அரசு விலக்கி கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா தலைவர் கே. மணிகண்டன் தலைமை வகித்தார். ‘ மாவட்ட தலைவர் டி .மாரிமுத்து, தாலுகா செயலர் கே.கார்த்திக் ஆகியோர் பேசினர். தாலுகா குழு உறுப்பினர்கள் என்.கார்த்திக் கே.கிருஷ்ணகுமார் என்.தமிழரசன் சி.சாந்தகுமார், முன்னணி ஊழியர்கள் கே.தர்மராஜ், பிலோமின் ராஜ்,எம்.மணிகண்டன், ஞா.சங்கீதன், எம்.மணிவண்ணன், கே.பிரசாந்த், பார்த்திபன், பிரசாத், மேசாக் உள்பட பலர் கலந்து கொண்டனர். தாலுகா குழு உறுப்பினர் சி.ராஜேஷ் நன்றி கூறினார்.
மின்வாரிய காலி பணியிடங்களை நிரப்ப கோரி.ராமேஸ்வரத்தில் ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்
எழுதியவர்: mohan November 20, 2020, 9:14 am




You must be logged in to post a comment.