17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » தன்னலமற்ற சமூக சேவையில் “உயர்ந்த மனிதன்”..

தன்னலமற்ற சமூக சேவையில் “உயர்ந்த மனிதன்”..

எழுதியவர்: ஆசிரியர் November 20, 2020, 1:18 am

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத் தெரு பகுதியில் வசித்து வரும் உயர்ந்த உள்ளம் கொண்ட உன்னத மனிதனாக செயல்பட்டு வருபவர் பெயிண்டர் தொழில் செயும் மீரான் முகைதீன் கிளி என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் இந்த மனிதர்தான்.

கீழக்கரையில் தொடர்ந்து மழை பெய்து வரும் காரணத்தினால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி பொதுமக்கள் செல்வதற்கு மிகவும் அவதியான நிலை உருவாகியுள்ள நிலையில் உள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் இந்த உயர்ந்த உள்ளம் கொண்ட மனிதர் தானாக முன்வந்து அப்பகுதியில் தேங்கியிருக்கும் நீரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். எந்த ஒரு பலனும் இல்லாமல் சமூக சேவை செய்யும் உயர்ந்த உள்ளம் கொண்ட  இவர் நிச்சயமாக பாராட்டபட வேண்டிய “உயர்ந்த மனிதர்”தான்..

கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!