18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பனைக்குளம் அரசு பள்ளி ஆய்வக உதவியாளரிடம் ரூ.1000 லஞ்சம் கருவூல பெண் ஊழியர் கைது…

பனைக்குளம் அரசு பள்ளி ஆய்வக உதவியாளரிடம் ரூ.1000 லஞ்சம் கருவூல பெண் ஊழியர் கைது…

எழுதியவர்: ஆசிரியர் November 19, 2020, 7:55 pm

இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆய்வக உதவியாளர் பாத்திமா ரசியா சுல்தானா. அரசு ஊழியர்களுக்கான இதர படி படிவம் எண் 70 நகல் தொடர்பாக உச்சிப்புளியில் உள்ள மண்டபம் சார் கருவூல கணக்காளர் களஞ்சிய ராணியை தொடர்பு கொண்டார். அப்படிவத்தை நகல் எடுத்து தர பாத்திமா ரசியா சுல்தானாவிடம், களஞ்சியராணி ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். இது குறித்து பாத்திமா ரசியா சுல்தானா, ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் இன்று காலை புகார் கொடுத்தார்.

இதனையடுத்து ரசாயன பவுடர் தடவிய இரண்டு 500 ரூபாய் நோட்டுகளை களஞ்சிய ராணியிடம்,  பாத்திமா ரசியா சுல்தானா இன்று (19.11.2020) மதியம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த  டிஎஸ்பி உன்னி கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் குமரேசன், ராஜேஸ்வரி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் களஞ்சிய ராணியை பிடித்தனர். அவரிடமிருந்து ரூ. ஆயிரத்தை பறிமுதல் செய்து, அவரை கைது செய்னர்.

மேலும், கூடுதல் கருவூல அலுவலர் செல்வக்குமாரிடமிருந்து கணக்கில் வராத ரூ.13, 650 ஐ பறிமுதல் விசாரிக்கின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!