18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் ஆழ்துளை கிணறு மூலம் அனுமதியின்றி குடிநீர் எடுத்து விற்பனை செய்த 10 நிறுவனங்களுக்கு சீல்:

மதுரையில் ஆழ்துளை கிணறு மூலம் அனுமதியின்றி குடிநீர் எடுத்து விற்பனை செய்த 10 நிறுவனங்களுக்கு சீல்:

எழுதியவர்: mohan November 19, 2020, 1:11 pm

ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் எடுத்து நிறுவனங்களுக்கு விற்றதால், சீல்வைத்து கோட்டாட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளாராம்.அதே சமயத்தில் மதுரை நகரில் பல்வேறு பகுதிகளில் பரவை, கடச்சனேந்தல், ஊமச்சிக்குளம், கோச்சடை உள்ளிட்ட பகுதிகளில் திறந்தவெளி கிணற்றில் நீரை லாரிகளில் எடுத்து வந்து, சுத்திகரிக்காமலும், சிலர் தண்ணீர் சப்ளை செய்து வருகின்றனராம்.இது குறித்து மதுரை மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டும், கட்டுப்படுத்த தயக்கம் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.மதுரை அருகே பரவை கிராமத்தில் லாரிகளில்,கிணற்று நீரை விற்பணைக்கு அனுப்புவதுகுடிசைத் தொழில் போல நடைபெறுகிறதாம்.தண்ணீரை சுத்திகரித்து, விற்பனை செய்தால் நன்மை கிட்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!