17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தளவாய்புரம் அரசரடி பகுதியில் குடிபோதையில் செல்போன் டவர் மீது ஏறி நின்று ரகளை. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

தளவாய்புரம் அரசரடி பகுதியில் குடிபோதையில் செல்போன் டவர் மீது ஏறி நின்று ரகளை. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

எழுதியவர்: mohan November 19, 2020, 1:06 pm

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரம் அரசரடி பகுதியில் செல்போன் டவர் மீது ஏறி நின்று வாலிபர் ஒருவர் கீழே விழுந்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.இது சம்பந்தமாக தளவாய்புரம் போலீசாருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் அவர் மாங்குடி பகுதியைச் சேர்ந்த ராஜதுரை ( வயது 40) என்பதும் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை பத்திரமாக போலீசார் கீழே இறக்கி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!