17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அருணாசலேஸ்வரர் கோவிலில் 4 புதிய மெட்டல் டிடெக்டர் கருவி

அருணாசலேஸ்வரர் கோவிலில் 4 புதிய மெட்டல் டிடெக்டர் கருவி

எழுதியவர்: mohan November 19, 2020, 1:02 pm

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில், பாதுகாப்பு பணிக்கு, 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான, நான்கு மெட்டல் டிடெக்டர் கருவி அமைக்கப்பட்டது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டு முழுவதும் வருகின்றனர். பாதுகாப்பை கருதி, கோவிலுக்கு வரும் பக்தர்களை மெட்டல் டிடெக்டர் கருவியால் சோதனை செய்த பிறகே, போலீசார் உள்ளே அனுமதிக்கின்றனர். தற்போதுள்ள பழைய மெட்டல் டிடெக்டர் கருவியை அகற்றிவிட்டு, 10 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிதாக நான்கு மெட்டல் டிடெக்டர் கருவியை, கோவில் நிர்வாகம் வாங்கியுள்ளது. அவை நேற்று போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. ராஜகோபுரம் நுழைவுவாயிலில் இரண்டு, அம்மனி அம்மன் கோபுரம் மற்றும் திருமஞ்சன கோபுர நுழைவுவாயிலில், தலா ஒரு மெட்டல் டிடெக்டர் கருவி அமைக்கப்பட்டது. இவற்றை, கோவில் சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜை செய்து, முறைப்படி கோவில் இணை ஆணையர் ஞானசேகர், திருவண்ணாமலை ஏ.எஸ்.பி., கிரண் ஸ்ருதியிடம் ஒப்படைத்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!