17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகேதனியார் கல்லூரிஆக்கிரமிப்பு செய்திருந்த நிலங்களைவருவாய்த்துறையினர்அகற்றம் செய்தனர்.

உசிலம்பட்டி அருகேதனியார் கல்லூரிஆக்கிரமிப்பு செய்திருந்த நிலங்களைவருவாய்த்துறையினர்அகற்றம் செய்தனர்.

எழுதியவர்: mohan November 18, 2020, 6:36 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் மேற்கு தொடர்ச்சி மலையில் பழமைவாய்ந்த சின்ன மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது, இந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தையும், அதை சுற்றியுள்ள புறம்போக்கு நிலத்தையும் தனியார் வேளாண் கல்லூரி நிர்வாகத்தினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கடந்த மாதம் சுற்றுவட்டாரத்தில் உள்ள 18 பட்டி கிராம மக்கள் ஒன்றிணைந்து புகார் அளித்திருந்தனர்.கிராம மக்களின் புகாரின் பேரில் கல்லூரி மற்றும் கோவிலுக்கு பாத்தியப்பட்ட இடத்தை அளவிடும் பணி இன்று மூன்றாவது கட்டமாக நடைபெற்றது.இதில் கல்லூரி நிர்வாகத்தினர் கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 70க்கும். அதிகமான ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் தொட்டப்பநாயக்கணூர் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருக மகாராஜா உதவியுடன் உடனடியாக ஜே.சி.பி. இயந்திரம் மூலம் இன்று முதற்கட்டமாக சுமார் 20 ஏக்கர் அளவு ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.மேலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள 70க்கும் அதிகமான ஏக்கர் நிலத்தை அளவிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!