17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 2 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள்

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 2 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்கள்

எழுதியவர்: mohan November 18, 2020, 2:03 pm

மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 2 புதிய ஆம்புலன்ஸ் வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு மக்கள் நலனுக்காக 108 ஆம்புலன்ஸ் அவசர கால ஊர்தி சேவைகளை செயல்படுத்தி வருகின்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 23 ஆம்புலன்ஸ்கள் செயல்பட்டு வருகின்றன. சராசரியாக 20 கி.மீ., சுற்றளவிற்கு ஒரு ஆம்புலன்ஸ் என்ற விகிதத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் மக்கள் பயன்படும் வகையில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 2 புதிய ஆம்புலன்ஸ்களின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இன்றைய தினம் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தம் 25 ஆம்புலன்ஸ் வாகனங்கள் செயல்படுகின்றன இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) சகாய ஸ்டீபன்ராஜ், துணை இயக்குநர்கள் (பொது சுகாதாரத்துறை) மரு.செந்தில்குமார் (ராமநாதபுரம்), மரு.பி.இந்திரா (பரமக்குடி), 108 ஆம்புலன்ஸ் ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!