17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை அருகே தந்தையை கல்லால் அடித்து கொலை செய்த மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை அருகே தந்தையை கல்லால் அடித்து கொலை செய்த மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

எழுதியவர்: mohan November 18, 2020, 11:21 am

மதுரை அருகே உள்ள ஒத்தக்கடையை சேர்ந்தவர் மதுபாலன். இவரது மகன் மணிகண்டன் . இவர் குடிபோதையில் வந்த வீட்டில் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனை மதுபாலன் தட்டி கேட்டுள்ளார்.அப்போது ஏற்பட்ட தகராறில் மணிகண்டன் தந்தையை கல்லால் தாக்கி உள்ளார். இதில் பலத்த காயமடைந்த மதுபாலன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலையில் சிகிச்சை பலனளிக்காமல் மதுபாலன் உயிரிழந்தார். இதுகுறித்து மதுரை ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மணிகண்டனை தேடி வருகின்றனர். மகனே குடிபோதையில் தந்தையை அடித்துக் கொலை செய்தது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!