ராமநாதபுரத்தில் தொடர் மழைக்கு வலுவிழந்த வீடு இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம் பாரதிநகர், வெளிப்பட்டணம், சூரங்கோட்டை, கருங்குளம் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. கருங்குளம் கிராமத்தில் பெய்த மழையில் வீடு ஒன்று இன்று காலை இடிந்து தரைமட்டமானது. இதில் அந்த வீட்டில் தூங்கிய சோலையம்மாள் 70 இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இடிபாடுகளில் சிக்கிய சோலையம்மாள் உடலை ராமநாதபுரம் டவுன் போலீசார் மீட்டனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் இன்று காலை 8 மணி நிலவரப்படி மழை அளவு (மி.மீ.,ல்)தீர்த்தாண்டதானம் 60, வட்டாணம் 43, தொண்டி 33.40, கமுதி 29.80, மண்டபம் 29, பரமக்குடி 28, வாலிநோக்கம் 27.60, ஆர்.எஸ்.மங்கலம் 24, திருவாடானை 13, கடலாடி 11, ராமநாதபுரம் 9, முதுகுளத்தூர் 8, பள்ளமோர்குளம் 7
ராமநாதபுரம் அருகே வீடு இடிந்து தரைமட்டம் இடிபாடுகளில் சிக்கிய மூதாட்டி பலி
எழுதியவர்: mohan November 17, 2020, 7:19 pm




You must be logged in to post a comment.