வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை சார்பில் காவேரிப்பாக்கம் கரும்பு கோட்டம் சார்பில் விஜயலட்சுமி மகாலில் கரும்பு விவசாயிகளின் கலந்தாய்வு மற்றும் குறை தீர்வு கூட்டம் நடந்தது. சர்க்கரை ஆலை தலைவர் குப்பத்தாமோட்டூர் எம்.ஆனந்தன் தலைமை தாங்கினார். தலைமை கரும்பு அலுவலர் முனிசாமி முன்னிலை வகித்தார். திரளான விவசாய சங்கத்தினர், விவசாயிகள் கலந்து கொண்டனர். முன்னாள் சேவூர் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் திருவலம் சிவானந்தம் அண்ணா தொழிற்சங்க செயலாளர் விஜயகுமார் மற்றும் யுவராஜ், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஏற்பாட்டை ஆலை சார்பாக கரும்பு அலுவலர் சேகர், உதவியாளர் தன்ராஜ் ஆகியோர் செய்து இருந்தனர்.
கரும்பு விவசாயிகள் கலந்தாய்வு
எழுதியவர்: mohan November 17, 2020, 4:48 pm




You must be logged in to post a comment.