தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களில் வழங்கப்படுவது போல மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ. 3 ஆயிரம், கடும் ஊனமுற்றோருக்கு மாதம் ரூ.5 ஆயிரம் மாத உதவித்தொகையாக தமிழக அரசு வழங்க வேண்டும், தனியார் துறை வேலைவாய்ப்புகளில் 5 சதவீத இட ஒதுக்கீட்டை உத்தரவாதப்படுத்த தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்,
அரசு பணியில் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களை 3 மாதத்துக்குள் அறிவித்து அவற்றை முழுமையாக நிரப்ப வேண்டும். இது தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
நூறு நாள் வேலைத்திட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் ரூ.265 தினக்கூலி கட்டாயமாக அமல்படுத்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாவட்ட துணைத் தலைவர் எஸ்.சீனிவாசன் தலைமையில் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முன் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமேஸ்வரத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
எழுதியவர்: mohan November 17, 2020, 4:44 pm




You must be logged in to post a comment.