18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரத்தில் மர்மமான முறையில் மூன்று மாடுகள் சாவு

திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரத்தில் மர்மமான முறையில் மூன்று மாடுகள் சாவு

எழுதியவர்: mohan November 16, 2020, 4:21 pm

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் மூன்று மாடுகள் மர்மமான முறையில் இறந்து இருந்ததால் இப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.அவனியாபுரம் காவல் நிலையம் எதிரே உள்ள ஜேபி நகர் 3வது தெருவில் வசிப்பவர் செல்லையா மகன் மாரியப்பன் இவர் இப்பகுதியில் மாடுகள் வளர்த்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று இரவு 9.00 மணி அளவில் தனது மாடுகளை அருகில் உள்ள காலியிடங்களில் கட்டிப் போட்டுள்ளார். இரவு 11 மணி அளவில் இவரது மாடுகளில் 3 மற்றும் நுரை தள்ளி துடிதுடித்து இறந்து கிடந்ததை கண்டு அக்கம்பக்கத்தினர் மாரியப்பனிடம் கூறவே அங்கு வந்துமாரியப்பன் கண்டபோது மாடுகள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.இதுகுறித்து காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!