17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தி.மலை அறிவியல் பூங்கா திறப்பு

தி.மலை அறிவியல் பூங்கா திறப்பு

எழுதியவர்: mohan November 16, 2020, 4:03 pm

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் ரூ. 3.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டது.மாணவர்களின் அறிவியல் குறித்த அடிப்படை அறிவினை முறை சாரா வகையில் ஏற்படுத்துவதே இந்த பூங்காவின் முக்கிய நோக்கம் என்றும்¸ மாணவர்கள் கல்வி முறையில் அல்லாது விளையாட்டு முறையில் அறிவியல் சம்மந்தமான நுனுக்கமான விவரங்களை அறிந்து கொள்ளவும்¸ அவர்கள் எளிதில் அணுகும் வகையில் அறிவியல் உபகரணங்கள் திறந்தவெளியில் அமைக்கப்பட்டு மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை துண்டும் வகையிலும் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த பிப்ரவரி 6ந் தேதி இந்த பூங்காவை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்த அறிவியல் பூங்காவை பயன்படுத்திக் கொள்ள பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கந்தசாமி அறிவித்தார். இதையொட்டி பூங்கா திறக்கப்பட்டது. இதில் கலெக்டர் கந்தசாமி¸ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பா. ஜெயசுதா¸ உதவி ஆட்சியர் (பயிற்சி) அமித்குமார்¸ துணை ஆட்சியர் (பயிற்சி) அஜீதா பேகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.பிறகு கலெக்டர் கந்தசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது¸ அறிவியல் பூங்காவிற்குள் செல்ல காலை 6 மணி முதல் 9 மணி வரை¸ மாலை 4 மணி முதல் 7 மணி வரை மட்டுமே பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்படும். இங்கு வரும் பொதுமக்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டி விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். அப்போது கலெக்டர் கந்சாமியுடன் பொது மக்கள்¸ மாணவர்கள்¸ இளைஞர்கள் மிகுந்த ஆர்வத்துடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இறுதியாக ஏரிக்கரை அருகில் கண்கவர் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. திறப்பு விழா நடைபெற்று 8 மாதத்திற்கு பிறகு பூங்கா திறக்கப்பட்டுள்ளது சிறுவர்¸ சிறுமியர்களை குஷியடைய வைத்துள்ளது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!