17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே கட்டத்தேவன்பட்டி விலக்கில்சாலை விபத்தில் தந்தை மகன் பலி, இருவர் படுகாயம்

உசிலம்பட்டி அருகே கட்டத்தேவன்பட்டி விலக்கில்சாலை விபத்தில் தந்தை மகன் பலி, இருவர் படுகாயம்

எழுதியவர்: mohan November 14, 2020, 11:24 am

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்துகுமார் அவரது 3 வயது மகன் நிஷாந்த் என்ற இருவரும் இருசக்கர வாகனத்தில் உசிலம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்த போது கட்டத்தேவன்பட்டி விலக்கில் கட்டத்தேவன்பட்டியிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்த சமாதானம், அசோக் என்ற இருவரும் தந்தை மகன் வந்த இருசக்கர வாகனத்தை நேருக்கு நேர் மோதியுள்ளனர்.இதில் நிலை தடுமாறிய இரு இருசக்கர வாகனங்களும் எதிரே வந்த தனியார் பேருந்தின் பின்புற டயரில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் தந்தை முத்துகுமார் மற்றும் அவரது 3 வயது மகன் நிஷாந்த் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியான நிலையில்மற்றுமொரு இருசக்கர வாகனத்தில் வந்த கட்டத்தேவன்பட்டியைச் சேர்ந்த சமாதானம், வகுரணியைச் சேர்ந்த அசோக் என்ற இருவர் படுகாயமடைந்தனர்.சம்பவமறிந்து விரைந்து வந்த சிந்துபட்டி காவல் நிலைய போலிசார் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் விபத்தில் பலியான தந்தை மகன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!