17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராஜபாளையத்தில் ஆட்டோ ஓட்டுனர் தீக்குளித்து தற்கொலை

ராஜபாளையத்தில் ஆட்டோ ஓட்டுனர் தீக்குளித்து தற்கொலை

எழுதியவர்: mohan November 13, 2020, 9:34 am

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஆட்டோ ஓட்டுனர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.ராஜபாளையம் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜ்(50) இவர் இப்பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் மகள் உள்ளனர். சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார்.இந்நிலையில் ராஜபாளையம் வடக்கு காவல் நிலையம் பின்பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.அருகிலிருந்தவர்கள் இவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.சம்பவம் குறித்து வடக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!