17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பேற்பு; கல்வியாளர்கள் வாழ்த்து…

தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பேற்பு; கல்வியாளர்கள் வாழ்த்து…

எழுதியவர்: mohan November 12, 2020, 9:22 am

தென்காசி மாவட்டக் கல்வி அலுவலராக எஸ். ஜெயபிரகாஷ் ராஜன் பொறுப்பேற்றுக் கொண்டார். தென்காசி மாவட்டக் கல்வி அலுவலராக பணியாற்றிய (பொறுப்பு) செந்தூர் பாண்டியன் தென்காசி ஐ.சி.ஐ.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணிக்கு சென்றுவிட்டார். இதனால் அச்சன்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் எஸ்.ஜெயபிரகாஷ் ராஜன் தென்காசி மாவட்டக் கல்வி அலுவலராக (பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தென்காசி மாவட்டக் கல்வி அலுவலகம் வந்து பொறுப்பேற்றுக் கொண்டார்.மாவட்டக் கல்வி அலுவலர் எஸ்.ஜெயபிரகாஷ் ராஜனுக்கு தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞமான கே.திருமலை பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.மேலும் மாவட்டக் கல்வி அலுவலக ஊழியர்கள், தென்காசி கல்வி மாவட்ட அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், தனியார் மெட்ரிக் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகளின் தாளாளர்கள், முதல்வர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!