17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் கொரோனா இல்லை… ஆனா இருக்கு.. அதிமுக சார்பில் தீபாவளி நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி.. காற்றில் பறந்த சமூக இடைவெளி…..

கீழக்கரையில் கொரோனா இல்லை… ஆனா இருக்கு.. அதிமுக சார்பில் தீபாவளி நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி.. காற்றில் பறந்த சமூக இடைவெளி…..

எழுதியவர்: ஆசிரியர் November 10, 2020, 12:17 am

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் அதிமுக சார்பில் உசேனியா திருமண மண்டபத்தில் நகரச் செயலாளர் ஜகுபர் உசேன் தலைமையில் அதிமுகவினருக்கு தீபாவளி நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன் மற்றும் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரன் இருவரும் கலந்து கொண்டனர். இந்நலத் திட்டத்தைத் பெறவ சுமார் 500க்கு மேற்பட்ட நபர்கள் அரசு அறிவித்த சமூக இடைவெளி மற்றும் முகக் கவசம் அணியாமல் கூட்டம் கூட்டமாக ஒன்றோடு ஒன்று கலந்து இருந்தனர். அரசு பொறுப்பில் இருக்கும் எம்எல்ஏக்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சியிலேயே அரசின் விதிமுறையை பின்பற்றவில்லை என்பது மிகவும் வேதனையான விசயம்.

மேலும் பரமகுடி சட்டமன்ற உறுப்பினர் சதன்பிரபாகரன் கடந்த மாதம்தானர கொரோணா நோய் தொற்றிலிருந்து குணமடைந்தார் என்பது குறிப்பிடதக்கது. அதேபோல் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன் ஒரு மருத்துவர், ஆனால் அவர் கலந்து கொண்ட நிகழ்வில்  மக்களின் மீது அக்கறை இல்லாமல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.

கீழை நியூஸ் SKV முகம்மது சுஐபு

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!