தென் மண்டல ஐஜி முருகன் உத்தரவின் பெயரில் விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாள் அறிவுறுத்தலின்படி இராஜபாளையம் துணை கண்காணிப்பாளர் நாக சங்கர் தலைமையில் காவல் நிலையங்களில் உள்ள நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காணும் கூட்டமானது சுந்தரராஜபுரம் பகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபர்களும், அவர்கள் சார்ந்த வழக்கறிஞர்களும், கலந்துகொண்டு தீர்வு காணப்பட்டது என காவல்துறை துணை கண்காணிப்பாளர்நாகசங்கர் தெரிவித்தார். மேலும் பொதுமக்களின் பிரச்சனைகள் சிறப்பு தீர்வு கூட்டம் மூலம் எளிதாக உயர் அதிகாரிகள் அனனவரையும் சந்திக்க சந்தர்ப்பம் கிடைப்பதால் எண்ணற்ற வழக்குகள் தீர்வு காணப்பட்டது என காவல்துறையினர் தெரிவித்தனர்.
சுந்தரராஜபுரம் பகுதி காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் வழக்குகள் தீர்வு காணும் கூட்டம் நடைபெற்றது.
எழுதியவர்: mohan November 8, 2020, 11:52 am




You must be logged in to post a comment.