17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை ரிங் ரோடு சிந்தாமணி சுங்கசாவடியில் தகராறு செய்த 2 வழக்கறிஞர் உள்பட 7 பேர் கைது

மதுரை ரிங் ரோடு சிந்தாமணி சுங்கசாவடியில் தகராறு செய்த 2 வழக்கறிஞர் உள்பட 7 பேர் கைது

எழுதியவர்: mohan November 8, 2020, 11:32 am

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாமதுரை சிந்தாமணி ரிங் ரோட்டில் சிந்தாமணி சுங்கசாவடி செயல்பட்டு வருகிறது. காலை 11 மணியளவில் சென்னையிலிருந்து குவாலிஸ் காரில் வந்தவர்களிடம். சுங்கசாவடி கட்டணம் செலுத்துமாறு அங்கிருந்த ஊழியர்கள் கேட்டனர்.அதற்கு காரில் வந்தவர்கள் தாங்கள் வழக்கறிஞர்கள் என்றும், சுங்க கட்டணம் செலுத்த முடியாது என்று கூறியுள்ளனர். இதனால் சுங்கசாவடியில் பணிபுரிபவர்களுக்கும், காரில் வந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் அவர்கள் காரை குறுக்கே நிறுத்தி, அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களை சுங்க கட்டணம் செலுத்தாமல் செல்லுமாறு கூறியதையடுத்து. அந்த வழியாக வாகனத்தில் சென்றவர்கள் சுங்க கட்டணம் செலுத்தாமல்ல் சென்றனர்.இதனையடுத்து சுங்கச்சாவடி ஊழியர்கள் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காரில் வந்தவர்களை அங்கிருந்து செல்லும்படி கூறினர். ஆனாலும் அவர்கள் அங்கிருந்து செல்லாமல் தகராறு செய்தனர். உடனடியாக போலீசார் 7 பேரையும் காருடன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். அதில் செங்கல்பட்டை சேர்ந்த வழக்கறிஞர் அம்பேத்கர் துரை, முனிஸ்வரன் உள்ளிட்ட இருவர் மற்றும், 5 பேர் சட்டக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் என்றும் காரில் செங்கல்பட்டில் இருந்து நெல்லை சென்று கொண்டிருந்தது தெரிய வந்தது. வழியில் அனைத்து இடங்களிலும் காருக்கு சுங்க கட்டணம் செலுத்தி வந்த இவர்கள் மதுரை சிந்தாமணி சுங்கச்சாவடியில் சுங்ககட்டணம் செலுத்த முடியாது என்று தகராறு செய்து, அங்கு பணிபுரிபவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் பெத்துராஜ் அவர்கள் 7 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர் செய்தியாளர்

வி காளமேகம் மதுரை மாவட்டம்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!