17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற சிறப்பு காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் மீது தனியார் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

உசிலம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற சிறப்பு காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் மீது தனியார் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

எழுதியவர்: mohan November 8, 2020, 11:15 am

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கவணம்பட்டி சாலையில் வசித்து வருபவர் வீரணன்(55). இவர் உசிலம்பட்டி தாலுகா காவல்நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார் இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் ஆண்டிபட்டி கணவாய்கேட் மாவட்ட எல்லைபகுதியில் பணியாற்றிய பின் பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் இன்று காலை உசிலம்பட்டிக்கு வந்துகொண்டிருந்தபோது குஞ்சாம்பட்டியில் தேனியிலிருந்து மதுரை நோக்கி சென்ற தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற இருசக்கர வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவஇடத்திலேயே காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் வீரணன்; பலியானார். தகவலறிந்த உசிலம்பட்டி தாலுகா போலீசார் வீரணின் உடலை மீட்டு பிரேத பரிசோதணக்கு உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து உசிலம்பட்டி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!