இராமநாதபுரம் மாவட்டம் இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் மற்றும் பனை விதை நடும் விழா இன்று 07.10.2020 நடைபெற்றது.இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகள் நடும் பணிகளை நம் உரிமை அனைத்து வாகண ஓட்டுநர்கள் நலச்சங்க மாநில தலைவர் சாகுல் ஹமீது வழங்கி தொடங்கி வைத்தார்.மரக்கன்றுகளை பாதுகாக்கும் வலைக்கானஏற்பாடுகளை தொழிலதிபர் அல்மஜூனாஸ் சாகுல் செய்திருந்தார்.இராஜசிங்கமங்கலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஹபீப்,கபார்கான்,நூருல் அமீன், ஆசிரியர் பாதுஷா,ரிஸ்வான், முகம்மது மற்றும் பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.பள்ளி மாணவர்களுக்கு பனை பற்றியும், பனை சார்ந்த பொருளாதாரம் பற்றிய விழிப்புணர்வை சாகுல் ஹமீது எடுத்துரைத்தார்.
இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் மற்றும் பனை விதை நடும் விழா:
எழுதியவர்: mohan November 7, 2020, 6:24 pm




You must be logged in to post a comment.