17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

எழுதியவர்: mohan November 6, 2020, 11:31 am

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் 1 மற்றும் இரண்டாவது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்துக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூட வில்லை இதனால் மழைக்காலங்களில் மழைநீர் ஆங்காங்கே தேங்குவதால் சேறு சகதியுமாக மாறி வருவதால் விபத்து ஏற்படுகிறது என தெரிவித்தனர்மேலும் கழிவுநீர் கால்வாயை சரிவர சுத்தம் செய்யவில்லை எனவும் இதனால் கழிவு நீரும் மழைக்காலங்களில் தேங்கி துர்நாற்றம் வீசியும், பொதுமக்கள் இப்பகுதியில் நடக்க முடியாத சூழல் நிலவுகிறது.தற்போது பருவமழை துவங்கியுள்ளதால் மழைநீர், கழிவுநீர் தேங்கி இப்பகுதியில் விஷசந்துகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சம்தெரிவித்தனர்.இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் நிறைவேற்றாத காரணத்தினால் 1மற்றும் 2வது வார்டு பகுதி பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாரியப்பன் தலைமையில் நகராட்சி நிர்வாகத்தினை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷமிட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!