18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மழை காரணமாக இன்று மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை மந்தம் பூக்கள் விலை சரிவு….

மழை காரணமாக இன்று மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை மந்தம் பூக்கள் விலை சரிவு….

எழுதியவர்: mohan November 6, 2020, 10:51 am

மதுரை மாவட்டத்தில் அதிகாலை முதல் தொடர் கனமழை காரணமாக மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் இன்று பூக்களின் விலை கடுமையான விலை சரிவு ஏற்பட்டுள்ளது கடும் மழை காரணமாக மக்கள் மற்றும் வியாபாரிகள் பூக்கள் வாங்க வராத காரணத்தினால் பூக்கள் தேங்கியுள்ள காரணத்தினாலும் பூக்கள் விலை கடுமையான விலை சரிவு ஏற்பட்டுள்ளது இன்றைய பூ விலை நிலவரங்கள் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருப்பதால் மல்லிகைப் பூவின் விலை கிலோ 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையும் செவ்வந்தி பூ விலை கிலோ 50 ரூபாய் அரளி பூவின் விலை 50 முல்லைப் பூவின் விலை கிலோ 200 ரூபாய் பிச்சி பூவின் விலை 150 ரூபாய் சம்பங்கி பூவின் விலை 40 ரூபாய் ஒரு கிலோ துளசியின் விலை 40 ரூபாய் அனைத்து பூக்களின் விலையும் கணிசமாக விலை குறைந்துள்ளது மக்கள் நடமாட்டம் கணிசமாக குறைந்ததால் பூக்கள் விற்பனை மந்தமாகவே நடந்து வருவதாக மாட்டுத்தாவணி பூ வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர் செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!