மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி மயானத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. அந்த பகுதியில் இரவு நேரங்களில் மயானத்தை திறந்தவெளியில் டாஸ்மார்க் கடை போல் பயன்படுத்துகின்றனர்.மேலும் அங்கு வேலை செய்யும் மயான ஊழியர்களை அச்சுறுத்துவதாகவும் நேற்று இரவு குடிபோதையில் சமூகவிரோதிகள் மயானத்திற்கு வரும் பார்வையாளர்கள் அமரும் இடத்தில் பாட்டில்களை உடைத்துள்ளனர். மின் மோட்டாரை இயக்கும் மின்சாரம் வயரை அறுத்து பலகையை சேதப்படுத்தியுள்ளனர்.இதுகுறித்து மயான ஊழியர் பெரியசாமி கூறும்போது எங்களுக்கு உரிய பாதுகாப்பு கிடையாது என்றும் தினமும் இரவில் சமூக விரோதிகள் கூடி திறந்த வழி மதுபான கடை போல் பயன்படுத்துகின்றனர் .பணிபுரியும் ஊழியர்களை ஆயுதங்களுடன் அச்சுறுத்துகின்றனர்.மயானம் முழுவதும் சரக்கு பாட்டில்களும் பிளாஸ்டிக் கப்களுமாக காட்சியளிக்கிறது.நேற்று இரவு குடிபோதையில் குளியல் தொட்டிக்கு பயன்படும் மின் மோட்டாரை சேதப்படுத்தி மின்சார வயரைய அறுத்துள்ளனர் இதுகுறித்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்
திருப்பரங்குன்றம் அவனியாபுரத்தில் மாநகராட்சி மயானத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது.
எழுதியவர்: mohan November 5, 2020, 9:45 am




You must be logged in to post a comment.