17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 65 கிலோ குட்கா பொருள் பறிமுதல்

மதுரை அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 65 கிலோ குட்கா பொருள் பறிமுதல்

எழுதியவர்: mohan November 5, 2020, 9:39 am

மதுரை மாவட்டம் வலையங்குளம் பகுதியில் உள்ள சௌராஷ்ட்ரா காலனியைச் சேர்ந்த அன்சாரி(46) என்பவர் குட்கா பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து சுற்றுவட்டாரத்தில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது, அதன் அடிப்படையில் திருமங்கலம் டிஎஸ்பி வினோதினி தலைமையில் பெருங்குடி போலீசார் அன்சாரி வீட்டில் சோதனை மேற்கொண்டபோது, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர். மேலும் அன்சாரியை கைது செய்து இவர் எங்கிருந்து குட்கா பொருட்களை கொள்முதல் செய்கிறார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!