17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சுரண்டை, ஆலங்குளம், வழியாக புதிய ரயில் பாதை-கலெக்டருக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் கோரிக்கை..

சுரண்டை, ஆலங்குளம், வழியாக புதிய ரயில் பாதை-கலெக்டருக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் கோரிக்கை..

எழுதியவர்: mohan November 3, 2020, 11:56 am

சுரண்டை, ஆலங்குளம், வழியாக புதிய ரயில் பாதை அமைத்திட தென்காசி மாவட்ட காங்கிரஸ் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் வீகேபுதூர் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொ) மரகதநாதன் தலைமையில் நடந்தது.தாசில்தார் முருகு செல்வி, சமுக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மகாலட்சுமி, வட்ட வழங்கல் அலுவலர் சிவனு பெருமாள், தேர்தல் பிரிவு தாசில்தார் சுடலைமணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இம்முகாமில் மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஏகேஎஸ்டி சேர்மச்செல்வம் கடந்த 2014ம் ஆண்டு ரயில்வே துறையினரால் ஆய்வு செய்யப்பட்ட திருநெல்வேலியில் இருந்து ஆலங்குளம், சுரண்டை வழியாக சங்கரன்கோவிலுக்கு புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், தென்காசி மாவட்ட கலெக்டர் ஆபிஸை சுரண்டையில் அமைக்க வேண்டும், சுரண்டையில் அரசு பஸ் டெப்போ அமைக்க வேண்டும் எனவும் மனு அளித்தார்.மேலும் முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, உள்ளிட்ட மனுக்களை அளித்தனர். இதுவரை பொதுமக்களிடமிருந்து 100ககும் மேற்ப்பட்ட மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மக்கள் குறைதீர்க்கும் மனு நாள் முகாம் ஓவ்வொரு திங்கட்கிழமையும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் என தாசில்தார் முருகு செல்வி தெரிவித்தார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!