ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடல் பகுதியில் இருந்து மஞ்சள் மூடைகளை இலங்கைக்கு கடத்த நாட்டுப்படகில் தயாராக இருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து சம்பவ இடம் சென்ற போலீசார் நாட்டுப்படகை சோதனையிட்டனர். அதில் 73 மூடைகளில் இரண்டாயிரம் கிலோ மஞ்சள் இருந்தது தெரியவந்தது., இதனையடுத்து மஞ்சள், நாட்டுப் படகை பறிமுதல் செய்து கடத்தல்காரர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.கடந்த காலங்களில் போதைப்பொருட்கள், தங்க கட்டிகள் கடத்தி வந்த நிலையில் இலங்கைக்கு மஞ்சள் கடத்தல் தற்போது வாடிக்கையாகி உள்ளது. இச்சம்பவம் குறித்து காவல் துறை, மத்திய, மாநில உளவுத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் கடத்த இருந்த மஞ்சளின் சர்வதேச மதிப்பு 65 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.
இலங்கைக்கு கடத்த முயன்ற2 டன் மஞ்சள் நாட்டுப்படகுடன் பறிமுதல்
எழுதியவர்: mohan November 1, 2020, 1:13 pm




You must be logged in to post a comment.