17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழ்நாடு தினம்…. மதுரையில் தடையை மீறி தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் கைது.

தமிழ்நாடு தினம்…. மதுரையில் தடையை மீறி தமிழன்னை சிலைக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் கைது.

எழுதியவர்: mohan November 1, 2020, 12:24 pm

நவம்பர் 1 ம் தேதியன்று ஆண்டுதோறும் தமிழ்நாடு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை தமுக்கம் பகுதியில் அமைந்துள்ள தமிழன்னை சிலைக்கு பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனையடுத்து தமுக்கம் மைதானம் தமிழன்னை சிலை முன்பாக நீட்தேர்வை ரத்து செய்ய வேண்டும், மத்திய பணியிடங்களுக் கான நுழைவுதேர்வை தமிழில் நடத்த வேண்டும் , 7தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக உரிமைகளை பறிக்கும் மத்திய அரசைக்கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். கைது நடவடிக்கையின் போது போராட்டகாரர் களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான தள்ளுமுள்ளு காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!