18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 15-வது வட்ட கிளை பேரவை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 15-வது வட்ட கிளை பேரவை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

எழுதியவர்: mohan November 1, 2020, 12:07 pm

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 15-வது வட்ட கிளை பேரவை தலைவர் ஜெகஜோதி ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ராஜபாளையம் மக்கள் பிறப்பு இறப்பு சான்றிதழ் பெற சாத்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் செல்ல உள்ள நிலையை மாற்றி சிவகாசி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு மனு செய்ய மாற்ற வேண்டுமெனவும், ராஜபாளையம் பகுதிக்கு மருத்துவ கல்லூரி சட்டக் கல்லூரி வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும், ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டுமெனவும் மேலும் கொரோணா காலத்தில் அரசு அறிவித்த அகல விலைப்படி சரண்டர் விடுப்பு பறிப்பு மற்றும் ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 59 ஆக உயர்த்தியதை ரத்து செய்ய வேண்டும் என உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் அரசு ஊழியர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!