திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சத்தியாகிரக அறவழிப் போராட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் வேளாண் கருப்பு சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் உரிமை தினம் சத்தியாகிரக அறவழிப் போராட்டம் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. அறவழிப் போராட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் மார்க்கெட் குமார் ஆசை முசிர், காமராஜ், எல்ஐசி பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கட்சி தொண்டர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மத்திய அரசின் வேளாண் கருப்புச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது.
செங்கத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சத்யாகிரக அறவழிப் போராட்டம்
எழுதியவர்: mohan October 31, 2020, 1:45 pm




You must be logged in to post a comment.