17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கடையநல்லூரில் அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா;பரிசளிப்பு நிகழ்ச்சி..

கடையநல்லூரில் அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழா;பரிசளிப்பு நிகழ்ச்சி..

எழுதியவர்: mohan October 27, 2020, 3:45 pm

கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் சார்பில் ஜாமிஆ அன்நஜாஹ் அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழா மற்றும் திறனாய்வுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மெயின் பஜாரில் அமைந்துள்ள மஸ்ஜித் முபாரக் பள்ளிவாசல் வளாகத்தில் மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்தின் சார்பில் நடத்தப்படும் ஜாமிஆ அன் நஜாஹ் அரபிக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு குர்ஆன்,ஹதீஸ் அடிப்படையில் இஸ்லாமிய அடிப்படை கல்வி போதிக்கப்படுகிறது. இதற்கான ஆண்டு விழா ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணி அளவில் மஸ்ஜிதுல் முபாரக் பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது.இந்த விழாவிற்கு சேக் உதுமான் தலைமை தாங்கினார். கல்லூரியின் பேராசிரியர் பஷீர் அஹ்மத் உமரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.மஸ்ஜிதுல் முபாரக் செயலாளர் முகம்மது காசிம் சின்சா, பேராசிரியர்கள் ஜபருல்லாஹ் பத்ரி, முஹிபுல்லாஹ், மற்றும் ஆசிரியைகள் முன்னிலை வகித்தனர் கல்லூரி பேராசிரியர் முகமது கோரி அனைவரையும் வரவேற்றார்.முதலாவதாக 2-ஆம் ஆண்டு மற்றும் முதலாம் ஆண்டு ஜாமிஆ அன்நஜாஹ் அரபிக் கல்லூரியில் படித்து முடித்த 44 மாணவிகளுக்கு மஸ்ஜித் முபாரக் தலைமை இமாம் எஸ். எஸ். யூ .சைபுல்லாஹ் ஹாஜா பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.மேலும் மாணவர்களுக்கு மத்தியில் இஸ்லாம் குறித்து நடைபெற்ற போட்டி தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நிர்வாக கமிட்டியினர் கஸ்ஸாலி முஹம்மது கோரி, முஹம்மது யஹ்யா, ரஃபீக் அஹ்மத் மற்றும் உறுப்பினர்கள், மாணவ,மாணவிகளின் பெற்றோர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!