17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகில் உள்ள தேவர் சிலை வளாகத்தில் மறைந்த முன்னாள் எம்எல்ஏ மூக்கையாத்தேவர் சிலை நிறுவுவதற்காண பணிகளை அமைச்சர் ஆர்பி உதயகுமார் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்

உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகில் உள்ள தேவர் சிலை வளாகத்தில் மறைந்த முன்னாள் எம்எல்ஏ மூக்கையாத்தேவர் சிலை நிறுவுவதற்காண பணிகளை அமைச்சர் ஆர்பி உதயகுமார் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்

எழுதியவர்: mohan October 26, 2020, 3:12 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை வளாகத்தில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிகே மூக்கையாத்தேவருக்கு தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் தனது சொந்த செலவில் வெண்கல சிலை நிறுவுகிறார். இந்நிலையில் சிலை அமையவுள்ள இடத்தை துணை முதல்வர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்தார். இந்நிலையில் சிலை நிறுவும் பணிகளுக்காக பூமிபூஜை விழா நடைபெற்றது. இதில் வருவாய்துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் மற்றும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் நீதிபதி, மாணிக்கம், முன்னாள் எம்எல்ஏக்கள் முத்துராமலிங்கம், பாண்டியம்மாள் மற்றும் அதிமுக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!