திருப்பூரில் நியூஸ் 7 செய்தியாளர் மீது கொலை வெறித் தாக்குதல்; “தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்” (WJUT) கடும் கண்டனம்..
“தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின்” மாநிலத் தலைவர் அ.ஜெ.சகாயராஜ், மாநிலப் பொதுச்செயலாளர் பா.பிரதீப்குமார், மாநில பொருளாளர் இரா.ராம்ஜி ஆகியோர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது;
பல்லடத்தை சேர்ந்த நேச பிரபு என்பவர் கடந்த ஏழு வருடங்களுக்கும் மேலாக நியூஸ் 7 செய்தி சேனலில் பணி புரிந்து வருகிறார்.
இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் தன்னை நோட்டமிட்டு வருவதாகவும், விசாரித்து வருவதாகவும் காவல்துறைக்கு தகவலும் அளித்துள்ளார்.
தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என தெரிவித்தும் போலீசார் மெத்தனமாக நடந்துள்ள சம்பவம் நமக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேச பிரபு வீட்டருகே வந்த நபர்கள் சரமாரியாக கொலை செய்யும் நோக்கத்துடன் வெட்டி உள்ளனர். நேச பிரபு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த கொலைவெறி தாக்குதலுக்கு “தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்” தமது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
நேச பிரபு மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய நபர்கள் மீது தமிழ்நாடு அரசு பாரபட்சமற்ற முறையில் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் இந்த சம்பவத்தில் மிகவும் அலட்சியமாக செயல்பட்ட காவலர்கள் மீதும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.
பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக உடனடியாக தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செய்தியாளர் மீது அரசு அதிக கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம் என தமது கணடன அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இவன்:
ஜெ.அஸ்கர்,
மாநிலத் தலைமைச் செய்தி தொடர்பாளர்
தமிழ்நாடு உழைக்கும்
பத்திரிகையாளர் சங்கம்..
WORKING JOURNALISTS
UNION OF TAMILNADU

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









