வட கிழக்கு மாநிலமான மேகாலாயாவின் குகையில் வாழும் புதிய வகை நண்டு இனத்தை இளம் விஞ்ஞானி ஒருவர் இந்தியாவிலேயே முதல் முறையாக கண்டறிந்துள்ளார்.
இமய மலையை தழுவியிருக்கும் மேகாலயா பற்றி சொல்லும் போது அதன் வசீகரத்தன்மை கொண்ட அழகு நிறந்த அடர்த்தியான காடுகள் மற்றும் நீர் நிலைகளை குறிப்பிடாமல் இருக்க முடியாது.
உலகில் மொத்தம் 34 பகுதிகள் பல்லுயிர்களின் வாழ்விடமாக கருதப்படுகிறது. அதில் இந்தியாவில் உள்ள நான்கு இடங்களில் மேகாலயாவும் பல்லுயிர்கள் வாழும் பகுதிகளில் ஒன்றாக அறியப்படுகிறது.
உலகிலேயே மிக நீளமான இயற்கையாக அமைந்துள்ள குகைகளை கொண்ட பெருமையை மேகாலயா மாநிலம் பெற்றுள்ளது என்பதை அறிந்தவர்கள் குறைவுதான். அந்த குகையில் தான் சிறிய அளவிளான அரிய வகை உயிரினத்தை 29 வயது நிரம்பிய பர்வீன் பர்ஸானா அப்சர் என்பவர் கண்டு பிடித்துள்ளார்.
அந்த பெண்மணி விலங்கு அறிவியல் (Wild life Science) பற்றிய கல்வியை அலிகர் முஸ்லிம் யுனிவர்சிட்டியில் பயின்று வருவதோடு மலை குகையின் உயிரியல் தொடர்பான ஆராய்ச்சி ஒன்றையும் கிழக்கு ஜெய்ந்தியா மலையில் செய்து வருகிறார்.
குகை பற்றி ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு இருக்கும் போது அந்த பெண்மணி வெளிறிய நிறத்தில், பார்வையற்ற சிறிய வகை நண்டு ஒன்றை 2 சென்டிமீட்டர் நீளத்தில் முதன் முதலில் கண்டறிந்தார்.
அந்த புதிய வகை உயிரினம் இருள் சூழ்ந்த குகையில் வாழும் தன்மையுடைய அனேகமாக குருடாகவும், வேறு வகையான நண்டு இனத்தை போன்று அல்லாமல் வெளிறிய நிறத்திலும், கால்கள் மெல்லியதாகவும் அதில் முடிகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆராய்ச்சியை பற்றி பெண் விஞ்ஞானி கூறுகையில், நிளமான குகையின் முகப்பிலிருந்து 200 மீட்டர் தொலைவில் அரிய வகை உயிரினத்தை நான் பார்த்த பிறகு அதை பற்றி தொடர் ஆய்விற்காக வெளியே சென்றேன். அப்போது பளப்பளப்பாக இருந்த உயிரினத்தை கண்டு வியந்த நான்,அதை எடுத்து பார்த்து உடன் அது புதிய வகையான நண்டு இனம் என்பதை உறுதி செய்தேன். அதில் பெண், ஆண் மற்றும் அதனுடைய குட்டியும் இருந்தது. பொதுவாக ஆண் இனத்தை காண்பது அரிது, அது பெரிய விசயமாகவும் நினைத்தேன். என்னுடைய 11 வருட ஆராய்ச்சியில் இது போன்ற நண்டு இனத்தை கண்டதில்லை என்று பெருமிதம் அடைந்தார்.
உடனே அந்த உயிரினத்தை சிறப்பு வாய்ந்ததாக உணர்ந்த பர்வின் பர்ஸான கொல்கத்தாவில் உள்ள விலங்கியல் கணக்கெடுப்பு Zoology Survey) மையத்துக்கு உயிரினத்தின் மாதிரியை அனுப்பி வைத்தார். இரண்டே நாட்களில் அதை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் அது ஜீனஸ் டெரிடமோன் (Genus Teretamom) வகையை சார்ந்த புதிய வகை உயிரினம் என்று உறுதி செய்தனர்.
புதிதாய் கண்டுபிடிக்கப்பட்ட உயிரினத்துக்கு பெயர் வைக்க சொல்லி பெண் விஞ்ஞானியை ஆராய்ச்சியாளர்கள் கேட்டு கொண்டதால் தன் குடும்பத்துக்கு நன்றி சொல்லும் விதமாக டெரிடமோன் அப்சர்சும் (Teretamom Absarsum) என்று பெயர் சூட்டவும் அவர் எண்ணியுள்ளார்..

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









