வண்டி எண் 16181/16182 சென்னை எழும்பூர் – செங்கோட்டை – சென்னை எழும்பூர் வாரம் இரு முறை சேவை சிலம்பு விரைவு ரயில் 25.02.2019 முதல் வாரம் மூன்று முறை சேவை ரயிலாக இயக்கப்பட இருக்கிறது. வண்டி எண் 16181 சென்னை எழும்பூர் -செங்கோட்டை வாரம் மும்முறை சிலம்பு விரைவு ரயில் திங்கள், புதன், மற்றும் சனிக்கிழமைகளில் வழக்கமான நேரங்களில் இயக்கப்படும். அதேபோல் வண்டி எண் 16182 செங்கோட்டை – சென்னை எழும்பூர் வாரம் மும்முறை சிலம்பு விரைவு ரயில் செவ்வாய், வியாழன மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இயக்கப்படும்.
இந்த வாரம் மும்முறை சேவை ரயிலின் முதல் சேவை திங்கட்கிழமை (25.02.2019) முதல் சென்னை எழும்பூரிலிருந்து துவங்கும். செங்கோட்டையிலிருந்து முதல் சேவை (26.02.2019) முதல் துவங்கும்.


You must be logged in to post a comment.