தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நெல்லை மேற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் அறிமுக விழா சிறப்பாக ஆலங்குளத்தில் நடைபெற்றது. ஆலங்குளம் டிபிவி திரையரங்கு திடலில் வைத்து நடைபெற்ற இந்த விழாவிற்கு நெல்லை மண்டல தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
தென்காசி வியாபாரிகள் சங்க தலைவர் இஸ்மாயில், பாவூர்சத்திரம் தொழிலதிபர் பால்ராஜ், நெல்லை மாவட்ட அரிசி ஆலை அதிபர்கள் சங்க தலைவர் அன்பழகன், ஆலங்குளம் நகர வியாபாரிகள் சங்க செயலாளர் உதயராஜ், குற்றாலம் வியாபாரிகள் சங்கத்
தலைவர் பாண்டியன், ஆலங்குளம் முன்னாள் அரிசி ஆலை உரிமையாளர் சங்க தலைவர் ராமசாமி, ஆலங்குளம் அரிசி ஆலை உரிமையாளர் சங்க துணைத்தலைவர் சண்முகவேல், கல்லிடை வியாபாரிகள் சங்க தலைவர் வேம்பு,வடகரை வியாபாரிகள் சங்க தலைவர் ஷேக்ஒலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத் தலைவர் வைகுண்டராஜா அனைவரையும் வரவேற்று பேசினார். ஆலங்குளம் நகர வியாபாரிகள் சங்க மூத்த தலைவர் விஷ்ணு நாடார்,செங்கோட்டை வியாபாரி சங்க தலைவர் ரஹீம், பாவூர்சத்திரம் தொழிலதிபர் தங்கராஜ், ரெட்டியார்பட்டி வியாபார சங்க தலைவர் செல்வராஜ், பாவூர்சத்திரம் வணிகர்கள் சங்க தலைவர் லோட்டஸ் முருகன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்தனர்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொது செயலாளர் கோவிந்தராஜூலு, மாநில பொருளாளர் சதக்கத்துல்லா, மாநில கூடுதல் செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா விழாப் பேருரையாற்றினார்.
நெல்லை மேற்கு மாவட்ட தலைவராக டிபிவி வைகுண்டராஜா, செயலாளராக கணேசன், பொருளாளராக கலைவாணன் செயற்குழு உறுப்பினா்கள் கணேசன், காிகால் மன்னவன் செய்தி தொடா்பாளராக இமானுவேல், ஆகியோரை அறிமுகப்படுத்தி வைத்தார். இந்த புதிய நிர்வாகிகள் அறிமுக விழாவின் போது பின் வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொதுமக்களும் வணிகர்களும் எளிமையாக செலுத்தும் வகையில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு 5 முதல் 10 சதவீதத்துக்குள் இருக்கவேண்டும், கேரளாவில் இருந்து இரும்பு போன்ற பொருள்களை முறையாக ஜிஎஸ்டி வரி 18 சதவீதம் கட்டி கொண்டு வரும் வணிகர்களின் வாகனங்களை தமிழகத்திற்குள் அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இனிதே அறிமுக விழா நிறைவுற்றது.
செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









