இராமநாதபுரம் கிழக்கு அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா..

இராமநாதபுரம் கிழக்கு அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா உச்சிப்புளியில் நடந்தது. பன்னாட்டு லயன்ஸ் கொடை திட்ட ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட தலைவர் விஜயகுமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய உறுப்பினர்களை முன்னாள் ஆளுநர் வேலுச்சாமி இயக்கத்தில் இணைந்தார்.

அதைத் தொடர்ந்து சேவை திட்டங்களை முதல் துணை ஆளுநர் முருகன் துவங்கி வைத்தார். மண்டல தலைவர் ராமகிருஷ்ணன், வட்டாரத் தலைவர் பாலகிருஷ்ணன் பேசினர். தலைவராக ஜானகிராமன், செயலாளராக செல்வக்குமார், பொருளாளராக அப்துல் மாலிக் புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்றனர். துணைத் தலைவர் ராஜ் குமார், ஹபீப், துணை செயலாளராக இளங்கோவன், உறுப்பினர் வளர்ச்சி தலைவராக முருகானந்தம், செய்தி தொடர்பாளராக நாராயணமூர்த்தி, சங்க சேவை திட்ட ஒருங்கிணைப்பாளராக வேணுகோபால், பன்னாட்டு லயன்ஸ் கொடை திட்ட ஒருங்கிணைப்பாளராக விஸ்வநாதன் ஆகியோர் பொறுப்பு ஏற்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!