இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத் தெருவைச் சார்ந்த சிங்கப்பூர் டிராவல்ஸ் ஜகுபர், மகன் ஜாவித் கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு வழக்கறிஞர் படிப்பை முடித்து வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.
இதை தொடர்ந்து இன்று (11/06/2021) கீழக்கரை முஸ்லீம் பஜாரில் வழக்கறிஞர் பணிக்காக அலுவலகம் திறந்தார். அந்த அலுவலகத்தை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஹமீது சுல்தான் திறந்துவைத்தார். இந்நிகழ்வின் போது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முஜிப், மஹ்தூமியா மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் இப்திகார் ஹசன், இன்ஜினியர் கபீர், தெற்கு தெரு ஜமாத் செயலாளர் செய்யது இபுராகிம், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.





You must be logged in to post a comment.