கீழக்கரையில் ஒரு புதிய கராத்தே பள்ளி..

இராமநாதபுரம் மாவட்டத்தில் 25வருடத்திற்கும் மேலாக கராத்தே பயிற்சியில் அனுபவமுள்ளவர் கராத்தே கண்ணன்.  இவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் பல் வேறு பள்ளிகளில் மாணவர்களுக்கு தற்காப்பு கலையை பயிற்றுவித்து வருகிறார்.

இவரது கராத்தே பயிற்சி இராமநாதபுரம் எக்ஸ்னோரா பூங்கா மற்றும் கிரேன் ஜூனியஸ் அகாடமியில் அதிகாலை மற்றும் மாலை நேரத்தில் நடைபெற்று வருகிறது.  அதன் தொடர்ச்சியாக கீழக்கரை சதக் சாலை, அஹமது தெரு தபால் நிலையம் அருகில் கோபுகான் ஷிட்டோ ரியோ கராத்தே பயிற்சி பள்ளி 06/02/2019 அன்று திறக்கப்பட்டு 20க்கும் மேற்பட்டவர்கள் பயிற்சியில் கலந்து கொண்டார்கள்.  கீழக்கரையில் இப்பள்ளி வாரத்தில் இரண்டு நாட்கள் செயல்படும் என அறியப்படுகிறது.  இப்பள்ளியை பற்றிய கூடுதல் விபரங்களை கராத்தே ஆசிரியர் கண்ணன் அலைப்பேசி எண் +91 99447 31069 தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

ஆசிரியர்

[email protected]
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!