23 வயதில் சிவில் நீதிபதி தேர்வில் சாதித்த பழங்குடி பெண்!-“சத்தியபாதை”, “கீழை நியூஸ்”குழுமத்தின் நிறுவனர் வாழ்த்து செய்தி..

 

இது சம்பந்தமாக சத்தியபாதை மற்றும் கீழை நியூஸ் குழுமத்தின் நிறுவனர் சையது ஆப்தீன் கீழ்கண்டவாறு வாழ்த்து செய்தி கூறியுள்ளார்..

23 வயதுடைய பழங்குடி பெண் ஸ்ரீபதி, சிவில் நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.இதற்காக ஸ்ரீபதியை பலரும் பாராட்டி வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை உச்சியில் இருக்கிறது புலியூர் குக்கிராமம். இக்கிராமத்தில் வசிக்கும் ஸ்ரீபதி என்ற பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த இளம்பெண், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்று நீதிபதி ஆகியிருக்கிறார். 23 வயதே ஆன ஸ்ரீபதிக்கு பி.ஏ., பி.எல் சட்டப்படிப்புப் படித்துக்கொண்டிருக்கும் போதே திருமணம் ஆகிவிட்டது. திருமணத்துக்குப் பிறகும் படிப்பைத் தொடர அவரது கணவர் உதவியாக இருந்திருக்கிறார்.இந்த நிலையில், கர்ப்பமடைந்த ஸ்ரீபதி நீதிபதி தேர்வுக்கும் தயாரானார். பிரசவ தேதியும், தேர்வு தேதியும் ஒரே நாளில் வந்திருக்கிறது. ஆனால், நல்வாய்ப்பாகத் தேர்வு தேதிக்கு இரண்டு நாள்கள் முன்பே குழந்தை பிரசவித்திருக்கிறார் ஸ்ரீபதி. ஆனாலும் முயற்சியை கைவிடாத ஸ்ரீபதி, அந்த நிலையிலும் சென்னைக்கு வந்து தேர்வு எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். தற்போது சிவில் நீதிபதி தேர்வில் வெற்றிப்பெற்று சாதித்துள்ளார் அவருக்கு நமது கீழை நியூஸ் மற்றும் சத்திய பாதை குழுமத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் எனக் கூறியுள்ளார்..

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!