துபாய் நகரம் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரு வாய்ப்பை உண்டாக்கும் இடம் என்றால் மிகையாகாது. அந்த அளவிற்கு உலகில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் துபாய் மண்ணை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
ஆனால் அங்கு வரும் மக்களுக்கு அதுவும் முக்கியமாக தென்னிந்தியாவில் இருந்து வாழ்வாதாரத்திற்காக வருகை தரும் மக்களுக்கு அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யவும், ஊரில் உள்ள தங்கள் சொந்தங்களுக்கு வெளிநாட்டு பொருட்களை, அதுவும் தென்னிந்திய மக்கள் அதிகமாக விரும்பும் சிங்கப்பூர் பொருட்களான சென்ட், தைல வகைகள், சேலைகள், கடல்பாசி, கைலி மற்றும் பல தரப்பட்ட பொருட்களை தரமான விலைக்கு கடந்த 1985ம் வருடம் முதல் வழங்கி வந்தனர். துபாயில் இருந்து தன் சொந்த ஊருக்கு செல்பவர்கள் நிச்சயமாக மொலினா டிரேடிங் பொருளுடன் செல்லாதவர்கள் நிச்சயமாக இருக்க மாட்டார்கள்.
மேலும் தற்பொழுது மக்களின் தேவையை நிவர்த்தி செய்யும் வண்ணமும், கூடுதலான வகையான பொருட்களை மக்களுக்கு வழங்கும் வகையில் துபாய் தமிழ் பஜார் பகுதியில் மொலினா டிரேடிங் கிளை துவங்கப்பட்டுள்ளது. இத்திறப்பு விழாவில் மொலினா டிரேடிங் வாடிக்கையாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.













You must be logged in to post a comment.