கீழக்கரையில் இன்று புதிய DSP அலுவலகம் திறப்பு – தமிழக முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்தார்.

கீழக்கரை நகர் வடக்கு தெரு பகுதியில் BSNL அலுவலகம் அருகாமையில் புதிதாக காவல் துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டப்பட்டு கடந்த வருடம் பணிகள் முழுமையாக நிறைவடைந்தது. இன்று 08.03.17 இந்த காவல் துறை அலுவலகத்தை முறைப்படி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி திரை காட்சி, வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட குற்றப் பிரிவு DSP மல்லிகா மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் தலைமையேற்று விழாவினை சிறப்பித்தனர். கீழக்கரையில் காவல் துறை துணைகண்கானிப்பு அலுவலகம் நவீன முறையில் கட்டப்பட்டு பல நாட்களாக பயன்பாட்டுக்கு வராமல் இருந்தது.

பொதுமக்களும், காவல்துறையை சேர்ந்தவர்களும் அந்த கட்டிடம் திறக்கப்படும் நாளை ஆவலோடு எதிர் பார்த்து காத்து இருந்தனர். இந்நிலையில் தற்போது சொந்த கட்டிடத்தில் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் இன்று மாலை 4 மணியளவில் திறக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக இருக்கிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

2 thoughts on “கீழக்கரையில் இன்று புதிய DSP அலுவலகம் திறப்பு – தமிழக முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்தார்.

  1. டி எஸ் பி மஹேஸ்வரி காளியப்பன் ஐ பி எஸ் கீழக்கரையில் பணியில் இல்லையா?

    1. 10 Days Bandobust Duty at Sri Bhagavathi Amman Temple, Mandaikadu , Kanyakumari

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!