கீழை நியூஸ் (KEELAI MEDIA & ADVERTISEMENT PVT. LTD) நிறுவனத்திற்கு புதிய சட்ட இயக்குநர் நியமனம்..

கடந்த வருடம்  KEELAI MEDIA & ADVERTISEMENT PVT. LTD  தனியார் நிறுவனமாக பதியப்பட்டு கீழை பத்திப்பகம் மற்றும் கீழை நியூஸ் போன்ற செயல்பாட்டுகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வியாபாரத்தின் முன்னேற்றம் மற்றும் அவசியத்தினை கருதி கீழக்கரை நெய்னா முகம்மது தண்டையார் தெருவைச் சார்ந்த முஹம்மது சாலிஹ் ஹுசைன் நிறுவனத்தின் சட்ட இயக்குனராக (LEGAL DIRECTOR) 01/03/2018 முதல் நியமிக்கப்பட்டுள்ளார். இத்தருணத்தில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் முசம்மில் இப்ராஹிம் சென்னை அலுவலகத்தில் இனிப்பு வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

வக்கீல் சாலிஹ் ஹுசைன் வணிகவியல் துறையில் பட்டய மேற்படிப்பும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வக்கீலாக உறுப்பினராகவும் உள்ளார். இவர் வக்கீல் துறை மட்டுமல்லாமல் சமுதாய பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து பல சமுதாய பணிகளை முன்னெடுத்து செய்து வருபவர். கீழக்கரையில் உள்ள பல சமூக அமைப்புகளிலும், கல்வி நிறுவனங்களிலும் ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார்.

கீழக்கரையில் தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றிய மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியதில் இவருக்கு முக்கிய பங்குண்டு. கீழக்கரையில் சட்டப்போராளிகள் என்ற பெயரில் குழுமம் ஆரம்பித்து கீழக்ககையில் உள்ள பிரச்சினைகளை முதல்வர் தனிப் பிரிவுக்கு ஆன் லைன் மூலமாக பொதுமக்கள் மூலம் புகார் மனுக்களை பதிவு செய்து பல சமுதாய பிரச்சினைகளுக்கு தீர்வ கண்டவர்.

இவர் நிறுவனத்தின் சட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை கீழை நியூஸ் (KEELAI MEDIA & ADVERTISEMENT PVT. LTD ) வாழ்த்துக்களுடனும, மகிழ்ச்சியுடனும் தெரிவித்துக் கொள்கிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

2 thoughts on “கீழை நியூஸ் (KEELAI MEDIA & ADVERTISEMENT PVT. LTD) நிறுவனத்திற்கு புதிய சட்ட இயக்குநர் நியமனம்..

  1. படித்தால் மட்டும் போதாது.படித்ததை நடைமுறை படுத்த வேண்டும்.ஆனால் சிலர் பெயருக்கு பின்னால் டிகிரியை போட வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே பட்டம் பெறுகிறார்கள்.அது போல் அல்லாமல் மக்கள் பயம் பெறும் வகையில் தோழர் சாலிஹ் சட்ட பணிகளில் வீரியத்தோடு செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்…

    1. சமூக பணிகளில் சாலீஹ் ஹூசைன் அவர்களின் பணி மிகவும் போற்றுதலுக்குரியது. கீழக்கரையில் இலஞ்சம், ஊழலை வேரறுத்தவர் என்று கூட சொல்லலாம்.. சட்டப்போராளிகள் தளத்தில் நிறைய தகவல்களை எடுத்துரைத்து அனைத்து நண்பர்களுக்கும் மிகப்பெரிய புரிதலை ஏற்படுத்தியவர்.. இவரைப் போன்ற நேர்மையானவர்கள் தான் சட்டமே படிக்க வேண்டும்.. இவரது பயணம் நமது இராமநாதபுரம் மாவட்டத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .. சட்டப்போராளிகளின் ஆணிவேரை வாழ்த்துகிறேன்.. யூ.நூருல் அமீன், துணை ஒருங்கிணைப்பாளர்,மக்கள் பாதை,இராமநாதபுரம் மாவட்டம்.

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!