மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் ரூபாய் ஒரு கோடி செலவில் புதிய மருத்துவ ஆய்வக கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் ரூபாய் ஒரு கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த மருத்துவ பரிசோதனை ஆய்வகம் புதிய மருத்துவ கட்டிடம் திறப்பு விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த புதிய மருத்துவ ஆய்வகம் கட்டிடத்தை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி கலந்துகொண்டு திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். பின்னர் ஆய்வகம் வசதிகள் குறித்தும் மருத்துவ பரிசோதனை வசதிகள் மற்றும் பணியாளர்கள் பற்றி மருத்துவர்களிடம் கேட்டு அறிந்தார். மதுரை மாவட்ட இணை இயக்குனர் மருத்துவர் ஆர். செல்வராஜ் மதுரை பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் செ.அய்யாசாமி மற்றும் திமுக ஒன்றிய செயலாளர் எம் பி பழனி எஸ் வி எஸ் முருகன் அஜித் பாண்டி செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் சுதாகரன் உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
உசிலை மோகன்
You must be logged in to post a comment.