ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தாலுகா போளிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கணேசனின் மகள் சீதா (15) பள்ளி மாணவியான இவர் தனது உறவினர் திருமணத்திற்காக வந்து இருந்தார்.போளிப்பாக்கம் கிராம கிணறு போல் உள்ள குளத்தில் துணி துவைக்கும் போது தவறி விழுந்தார். நீச்சல் தெரியாத காரணத்தால் நீரில் மூழ்கி இறந்தார். இதன் காரணமாக உறவினர் திருமணம் இன்று நடைபெற இருந்த திருமணம் நின்றது. இதனால் உறவினர்களும் கிராமத்தினரும் சோகத்தில் மூழ்கினர். பாணாவரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கே.எம்.வாரியார் வேலூர்


You must be logged in to post a comment.