ஆலங்குளத்தில் மோட்டார் வாகன ஆய்வு அலுவலகம்; தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் கோரிக்கை..

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அமைத்து தர வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தார். இந்த மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். தென்காசி மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டமாகும். தென்காசி மாவட்டத்தில் தென்காசி மற்றும் சங்கரன்கோவில் ஆகிய இரண்டு இடங்களில் ஆர்டிஓ அலுவலகம் அமைந்துள்ளது. மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அலுவலகம் வேறு எந்த பகுதியிலும் இல்லை. ஆலங்குளம் வளர்ந்து வரும் பெரிய நகரமாகும். இங்கு அரிசி ஆலைகள், காய்கறி மார்க்கெட், ஜவுளி கடைகள் மற்றும் சிறு குறு தொழில்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. மேலும் அதிபடியாக விவசாயம் நிறைந்த இந்த பகுதியில் வாகனங்கள் அதிகமாகவே உள்ளன. இதனை கருத்தில் கொண்டு ஆலங்குளத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அமைத்து தர வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் கோரிக்கை மனு வழங்கினார். மனுவை பெற்ற அமைச்சர் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார். இந்த சந்திப்பின் போது அரசு ஒப்பந்ததாரர் சண்முகவேல் அருகில் இருந்தார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!