திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உபமின் நிலையங்களில் நடைபெற உள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (16.10.2024) காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன் படி, திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் G.குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மானூர் உப மின் நிலையத்தில் 16.10.2024 புதன் கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட உபமின் நிலையத்தில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தடை செய்யப்படும். எனவே மானூர், மாவடி, தெற்குபட்டி, களக்குடி, எட்டாங்குளம், கானார்பட்டி, பிள்ளையார் குளம், குறிச்சிகுளம் ஆகிய ஊர்கள் மற்றும் இதனை சார்ந்த பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி கோட்ட செயற்பொறியாளர் ப. திருமலை குமாரசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அச்சன்புதூர் உப மின் நிலையத்தில் 16.10.2024 புதன் கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் வடகரை, அச்சன்புதூர், நெடுவயல், வாவாநகரம், காசிதர்மம், பண்பொழி, மேக்கரை, கரிசல் குடியிருப்பு ஆகிய ஊர்கள் மற்றும் இதனை சார்ந்த பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 2.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கீழப்பாவூர் உப மின் நிலையத்தில் 16.10.2024 புதன் கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் பாவூர்சத்திரம், கீழப்பாவூர், மேலப்பாவூர், குலசேகரப்பட்டி, குறும்பலாப்பேரி, நாட்டார்பட்டி, ஆவுடையானூர், வெய்காலிப்பட்டி, சின்ன நாடானூர், திப்பணம்பட்டி, செட்டியூர், பெத்தநாடார்பட்டி, கரிசலூர், செல்லத்தாயார்புரம், மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டினம் வடக்கு, சாலைப்புதூர் ஆகிய ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் ப. திருமலை குமாரசாமியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் பா.கற்பக விநாயக சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், 110/11KV நாரணாபுரம் துணைமின் நிலையங்களில் வருகின்ற 16.10.2024 புதன் கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தரணி நகர், வாசுதேவநல்லூர், சங்கனாப்பேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழப்புதூர், நெல் கட்டும் சேவல், சுப்ரமணியபுரம், உள்ளார், வெள்ளானை கோட்டை, மலையடிக்குறிச்சி, மற்றும் தாருகாபுரம் ஆகிய ஊர்கள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் காலை 9.00மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.