திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை மற்றும் கடையநல்லூர் உப மின் நிலையங்களில் மட்டும் 30.01.2025 (நாளை) வியாழக் கிழமை அன்று மாதந்திர பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளதால் பாளையங்கோட்டை மற்றும் கடையநல்லூர் உப மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 30.01.2024 அன்று மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங் கோட்டை (110/33-11KV) துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வருகிற 30.01.2025 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை வி.எம்.சத்திரம், கிருஷ்ணாபுரம், கட்டப் பொம்மன் நகர், செய்துங்க நல்லூர், அரியகுளம், மேலக்குளம், நடுவக் குறிச்சி, ரஹ்மத் நகர், நீதிமன்ற பகுதி, சாந்தி நகர், கான்சாபுரம், திருமலை கொழுந்துபுரம், மணப் படை வீடு மற்றும் கீழநத்தம் ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு கருதி மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும். இத்தகவலை திருநெல்வேலி நகர்ப்புற கோட்ட செயற் பொறியாளர் முருகன் தெரிவித்து உள்ளார்.
அதே போன்று, தென்காசி மாவட்டம் கடையநல்லூர் (110/11KV) துணைமின் நிலையங்களில் 30.01.2025 (நாளை) வியாழக் கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கடையநல்லூர், முத்துக் கிருஷ்ணா புரம், மாவடிக்கால், குமந்தாபுரம், தார்காடு, போகநல்லூர், மங்களா புரம், இடைகால், கொடிக்குறிச்சி மற்றும் நயினாரகரம் ஆகிய பகுதிகளில் 30.01.2025 காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கடையநல்லூர் கோட்ட செயற் பொறியாளர் பா.கற்பக விநாயக சுந்தரம் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.